பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர்… ரொம்ப சிம்பிளா நடந்த நடிகர் வீட்டு திருமணம்!

பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர்… ரொம்ப சிம்பிளா நடந்த நடிகர் வீட்டு திருமணம்!

சமீபகாலமாக நடிகர் நடிகைகள் பல கோடி சொத்து வைத்திருந்தாலும் கூட தங்களது சொந்த வீட்டு விசேஷங்களை மிகவும் சிம்பிளாக சாதாரண மனிதர்களைப் போல நடத்தி அழகு பார்க்கிறார்கள். அப்படித்தான் மலையாள சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஜெயராம்.

58 வயதாகும் நடிகர் ஜெயராம் தமிழில் பஞ்சதந்திரம், துப்பாக்கி, தெனாலி, உத்தமவில்லன், ஏகன், பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது மகள் மாளவிகாவுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது மிகவும் சிம்பிளாக கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் ஜெயராம் மகள் மாளவிகாவிற்கும் – நவநீதிருக்கும் திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவி வர அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்னர் தான் ஜெயராமின் மகனான நடிகர் காளிதாசுக்கு திருமணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.