நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.
இதனிடையே இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனித்தனியே வாழ போவதாக முடிவு எடுத்து பிரிந்து விட்டார்கள் தனித்தனியே வாழ்ந்து வந்த இவர்கள் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என குடும்ப நல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்
இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், உங்கள் இருவருக்கும் இன்னும் 6 மாதத்தில் அக்டோபர் 6 அல்லது 8 ஆம் தேதி கண்டிப்பாக விவாகரத்து கிடைத்துவிடும். ஆனால் நீங்கள் இப்போது கூறும் காரணம் எங்களுக்கு சரியாக படவில்லை. எனவே எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சரியான ஒரு காரணத்தை நீங்கள் சொல்ல வேண்டும் என கோர்ட் கெடுபிடி கொடுத்துள்ளாராம் .