90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோவாகவும், சாக்லேட் பாயாகவும், காதல் மன்னன் ஆகவும் பெண்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் இருந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை குவிக்க தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து கிட்டத்தட்ட 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மார்க்கெட் சரிந்து போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாஸ் அவர் எடுத்த முடிவுதான் அவரது வாழ்க்கையை பாழாக்கிவிட்டது. ஆம் வாய்ப்பு கிடைக்காதால் கிடைக்கும் வாய்ப்பு களில் நடிக்க ஆரம்பித்தார்.
கக்கூஸ் கழுவும் ஹார்பிக் விளம்பரத்தில் எல்லாம் நடித்தார். அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளே கிடைக்காமல் போனத. இதனால் வெளிநாட்டிற்கு சென்று கிடைத்த வேலை, மெக்கானிக் வேலை எல்லாம் செய்து வந்தார். அங்கு பாத்ரூம் கழுவும் வேலையை கூட அவர் செய்து வந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.