விரைவில் கைது ஆகப்போகும் நடிகை தமன்னா? சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

விரைவில் கைது ஆகப்போகும் நடிகை தமன்னா? சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

இந்திய சினிமாவில் நட்சத்திர ஹீரோயின் ஆன நடிகை தமன்னா தற்போது தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 34 வயதாகும் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. காரணம், கடந்த 2023ல் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஐ.பி.எல். போட்டிகளை பேர்பிளே (Fairplay) என்ற செயலி சட்டவிரோதமாக ஒளிபரப்பியுள்ளது.

இதனால் viacom நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.விஷயம் இப்படியிருக்க நடிகை தமன்னா Fairplay செயலியின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக நடந்துக்கொண்ட நிறுவனத்தை ஆதரிக்கும் வகையில் விளம்பரம் செய்த தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வருகிற 29-ம் தேதி தமன்னா நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.