சிலர் உண்மையில் நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாகவே உள்ளார்கள். சில தினங்களுக்கு முன்னர் ஈஸ்ட்- ஹாம் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில், ஒரு வயதான இந்தியர் பஸ்சுக்காக காத்திருந்தார். 2 பிட் பாக்கெட் அடிக்கும் இளைஞர்கள் அங்கே வந்துள்ளார்கள். ஒருவர் தாத்தாவோடு பேச்சுக் கொடுக்க. மற்றைய இளைஞர் பின்னால் நின்று, தாத்தாவின் ஐ போனை ஆட்டையை போட முற்பட்டுள்ளார். ஆனால் தாத்தா உடனே சுதாரித்துக்கொண்டார்.
திடீரென அவர் திரும்பியதும், ஐ-போனை ஆட்டையை போட நினைத்தவர் வசமாக சிக்கிக் கொண்டார். தாத்தா உடனே கைகளை ஓங்கி ஒரு குத்துவிடுவது பாசாங்கு செய்ய, அவ்வளவு தான் அந்த இளைஞர் கிடு நடுங்கிப் போனார். உடனே தன்னை நல்லவர் போல காட்ட, தாத்தாவிடம் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவை அனைத்துமே CCTV கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. லண்டனில் தற்போது பல்வேறு இடங்களில் இதுபோன்ற திருட்டு தலைதூக்கியுள்ளது.
2 பேர் வந்து ஒருவர் ஏதாவது பேச்சுக் கொண்டு, நாம் அவருடன் பேசிக்கொண்டு இருக்க மற்றைய நபர் பின்னால் இருந்து களவாடிச் சென்றுவிடுவார். இதில் பெண்களும் தற்போது ஈடுபடுவது தான் பெரும் சோகமான விடையம். உண்மையான இந்தியன் தாத்தா இவர் தான் போல இருக்கே ? வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.