ஹாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு நடிக்க வந்து இங்கு பல சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டவர் ஜோதிகா. இவர் நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தமிழில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்த வந்தார். இதனிடையே மீண்டும் பாலிவுட் பக்கம் குடி பெயர்ந்திருக்கும் ஜோதிகா ஹிந்தி படங்களில் நடித்த அதிக கவனத்தையும் ஆர்வத்தையும் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் அஜய் தேவ்கான் ஜோதிகா மற்றும் மாதவன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சைத்தான் இந்த திரைப்படம் ஓரளவுக்கு வசூல் ஈட்டி கொடுத்துள்ளது. இந்த படம் முதன் முதலில் ஜோதிகாவின் கைக்கு வந்த போது அந்த படத்தில் நடிக்க விரும்பவே இல்லையாம். அதன் பிறகு சூர்யா தான் ஸ்ரீகாந்த் கதையை படித்துவிட்டு ஜோதிகா இந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் எனை யோசித்து அவருக்கு யோசனை கூறி இருக்கிறார். அதன் பின் ஜோதிகா நடிக்க இந்த படம் தற்போது சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.