பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு அண்மையில் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு திரைத் துறையை சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அடுத்ததாக தனது இளைய மகளான அதிதிக்கும் திருமணமா? என்று ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அதிதி தற்போது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது.
இதை பார்த்த பலர் அக்காவை தொடர்ந்து அடுத்த முகூர்த்தத்திலே அதிதிக்கும் கல்யாணமா? ரசிகர்கள் வியப்புடன் கேள்வி கேட்டு வருகிறார்கள். புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின் ரியாக்சன் கொடுத்து தங்களது ரசனையை வெளிப்படுத்துகிறார்கள்.