விஜய் அண்ணா… கத்தி கூப்பிட்ட ரசிகை… கண்டுக்காமல் சென்ற விஜய் – வீடியோ!

விஜய் அண்ணா… கத்தி கூப்பிட்ட ரசிகை… கண்டுக்காமல் சென்ற விஜய் – வீடியோ!

மிகப்பெரிய நட்சத்திர நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் பிஸியாக நடித்த வருகிறார்.

இந்த நிலையில் கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் இன்று காலை ரஷ்ய நாட்டிற்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு விஜய்யை பார்த்த ரசிகை ஒருவர் விஜய் அண்ணா விஜய் அண்ணா என்று கத்தி கூப்பிட்டார். ஆனால் அது கேட்டும் விஜய் காதில் வாங்காதது போல் அங்கிருந்து நகர்ந்து சென்றார் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்த நெடிசன்ஸ் அந்த ரசிகைக்கு கை அசைத்து விட்டாவது சென்று இருக்கலாம். அல்லது ஒரு பார்வை பார்த்துவிட்டாவது போயிருக்கலாம். தேர்தலில் ஜெயிக்கணும் என முடிவெடுத்த தேர்தலில் என அரசியலில் இறங்கி இருக்கும் இப்படி ஒரு சமயத்தில் விஜய் இதுபோன்று நடந்து கொள்வது அவரது அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.