பிரபல youtuber ரான இர்பான் சமீப காலமாக பெரும் சர்ச்சைகள் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது அவருடைய காரின் எதிரில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவரின் மீது காரை ஏற்று விபத்துக்குள்ளாக்கினதில் சம்பவ இடத்திலேயே இந்த மூதாட்டி உயிர் இழந்துவிட்டார்.
இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து நான் கார் ஓட்டவில்லை என்னுடைய டிரைவர் தான் காரை ஓட்டினார் எனக்கூறி எஸ்கேப் ஆனார் இர்ஃபான் . இந்த சர்ச்சை முடிவதற்குள் அடுத்ததாக தற்போது மற்றொரு பெரும் சர்ச்சையில் சிக்கிருக்கிறார். அதாவது கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என வெளிநாட்டில் சென்று டெஸ்ட் செய்து பார்த்து அதனை எல்லோருக்கும் அறிவித்து பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார்.
இது இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை நடவடிக்கை நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியது . அத்துடன் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி இருந்தது. இதையடுத்து பகிரங்கமாக மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுத்திருக்கிறார் இர்பான்.
அவர் இந்த கடிதத்தை நேரில் சென்று கொடுத்த நிலையில் அதன். அதை ஒரு கண்டிஷன் உடன் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என நீங்களே ஒரு வீடியோவை வெளியிட வேண்டும் என அவர்கள் கண்டிஷன் போட்டு இருப்பதாக செய்திகள் கூறுகிறது.