பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் ஜூலை 4ம் திகதி இடம்பெற உள்ளது. நடந்து முடிந்த கவுன்சிலர் தேர்வில், ஆழும் கட்சியான கான்சர் வேட்டிவ் கட்சி படு தோல்வியடந்த நிலையில். ரிஷி சுண்ணக் ஏன் அவசரமாக பொதுத் தேர்தலை அறிவித்தார் ? என்று பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். வரும் டிசம்பர் மாதமே பொதுத் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால் தனது கட்சி படு தோல்வி அடைந்த நிலையில். உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த ரிஷி எவ்வாறு முடிவு செய்தார் ? அது போக அதன் பின்னல் உள்ள காய் நகர்த்தல் என்ன என்பது பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா !
டிசம்பர் மாதம் பொதுத் தேர்தலை நடத்தினால், தனது கட்சி படு தோல்வி அடையும். அதேவேளை ஜூலை தேர்தலை நடத்தினால் கூட, தனது கட்சி படு தோல்வியடையும் என்பது ரிஷி சுண்ணக்கிற்க்கு நன்றாகத் தெரியும். இந்த நிலையை மேலும் இழுத்துக் கொண்டு செல்லாமல். உடனே தேர்தல் ஒன்றை நடத்தி, ஆட்சியை மாற்றி விட்டால். புதிதாக பொறுப்பை ஏற்க்கும் லேபர் கட்சி மீது, கடும் சுமைகள் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் , தீர்க்கவே முடியாத பல பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளது. இதனை தீர்க்க , கான்சர் வேட்டிவ் கட்சியே திண்டாடி வருகிறது. இதனால் இந்த சுமையை புதிதாக வந்த லேபர் கட்சியால் தீர்க்க பல மாதங்கள் பிடிக்கலாம். இதனால் பல முட்டுக்கட்டைகள் லேபர் கட்சிக்கு வரும்.
அவர்கள் திணறுவார்கள். சரியாக நிர்வாகத்தை செய்யாது போனால், மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அதிருப்த்தி மன நிலை தோன்றும். இதனால் மீண்டும் கான்சர் வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடிக்க பல வாய்ப்புகள் உள்ளது என்று, ரிஷி சுண்ணக் திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் அவர் நினைப்பது நடக்குமா ? என்பது ஒரு பெரும் கேள்விக் குறி தான். இதேவேளை பிரிட்டனில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 2 லட்சத்தி 50,000 பேருக்கு வாக்கு உரிமை உள்ளதாக தரவுகள் கூறுகிறது. எனவே தமிழர்கள் இம்முறை யாருக்கு தமது வாக்குகளை செலுத்துவார்கள் என்பது பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது.