50 அகதிகளை ருவாண்டா தடுப்பு முகாமிற்க்கு அனுப்ப முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

இந்த செய்தியை பகிருங்கள்

பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து கோரும் நபர்களை, ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் நடை முறைப் படுத்தப்பட உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார், பொறிஸ் ஜோன்சன். முதல் கட்டமாக 50 பேரை பிரித்தானியா இன்னும் 14 நாட்களில் ருவாண்டா நாட்டு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கிறது. பெரும்பாலும் பிரான்சில் இருந்து படகு மூலமாக பிரித்தானியா வரும் நபர்களையே இவ்வாறு ருவாண்டா நாட்டு தடுப்பு முகாமுக்கு அனுப்ப பிரித்தானியா முடிவு செய்துள்ளது. அங்கே அவர்களை வைத்திருந்து, வழக்கை விசாரணை செய்து. அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்றால், அவர்களை மீண்டும் பிரித்தானியா வர அனுமதிக்கும் திட்டம் தான் இது. இதற்கு பலத்த எதிர்ப்பு காணப்பட்ட போதும், பிரித்தானிய அரசு இதனை நடை முறைப்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us