அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு 81 வயது ஆகிறது. மிகவும் வயது கூடிய அமெரிக்க ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவாகியவர் ஜோ பைடன். ஏற்கனவே அவருக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறது. இதேவேளை கடந்த சில வருடங்களாக அவர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறு பிள்ளை போல அவரது நடவடிக்கைகள் உள்ள நிலையில். நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட முடிவுசெய்துள்ளார்.
இவரை எதிர்த்து களம் இறங்கியுள்ளார் டொனால் ரம். இவர்கள் இருவருக்கும் இடையே நேரடி TV விவாதம் ஒன்று நேற்று(வியாழன்) இடம்பெற்றது. முன் நாள் அதிபர் ரம் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பைடனால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படிப் போனாலும் சரி , நேரடி (லைவ்) நிகழ்ச்சியில் பைடன் கூத்தாடி போல, நெளிந்து வளைந்து, பதில் கூறிய விதம். இவர் ஜனாதிபதியாக இருக்க, தகுதியுடையவரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. நேற்றைய தினம் நடந்த விவாதத்தில் , பைடனை அடித்து தூக்கி துவைத்துப் போட்டுவிட்டார் ரம்.
இதில் ஏற்பட்ட அவமானத்தைக் கூட பைடனால் உணர முடியவில்லை. பார்த்துக் கொண்டு இருந்த பைடன் கட்சி(டெமொகிராட்) கட்சி உறுப்பினர்கள் திகைத்துப் போனார்கள். ஆனால் பைடனின் மனைவியோ , இது எதனையும் கருத்தில் கொள்ளாமல் பைடன் மிக மிக நன்றாக பதில் கூறினார் என்று பைடனை வாழ்த்திப் பேசியுள்ளார். இனிப் போதும், உங்களுக்கு வயதாகி விட்டது அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டாம். என்று கூட ஜில் பைடனால்( மனைவியால்) கூற முடியவில்லை. அந்த அளவு பதவி ஆசை. ஆனால் அமெரிக்காவின் எதிர்காலம் எங்கே போகப் போகிறது ? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு. மீண்டும் டொனால் ரம் ஆட்சியைப் பிடிக்க இது ஏதுவாக அமையலாம்.
இதனால் ஜோ பைடன் அங்கம் வகிக்கும் டெமொகிரட் கட்சி, அவசரமாக கூடி ஒரு முடிவை எட்ட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் அதற்கு பைடன் ஒப்புக் கொள்ள வேண்டுமே ? GOD SAVE AMERICA ?