அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை – விரைந்து செயல்பட்ட சூப்பர் ஹீரோ… வைரலாகும் பரபர வீடியோ…!

இந்த செய்தியை பகிருங்கள்

வீட்டில் விளையாடி கொண்டு இருந்த மூன்று வயது சிறுமி குஷன்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகளை ஜன்னல் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருந்துள்ளார்.

கஜகஸ்தான் பகுதியை சேர்ந்த நபர் தனது உயிரை பணயம் வைத்து மூன்று வயது சிறுமியை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 100 அடி உயரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்த சிறுமியை காப்பாற்றியதை அடுத்து, அந்த நபர் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். இதோடு இந்த சம்பவம் அடங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்த சம்பவம் கஜகஸ்தான் தலைநகர் நர்சுல்தான் பகுதியின் அருகில் நடைபெற்று இருக்கிறது. தாய் ஷாப்பிங் சென்று விட்டதை அடுத்து வீட்டில் விளையாடி கொண்டு இருந்த மூன்று வயது சிறுமி குஷன்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகளை ஜன்னல் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென ஜன்னலுக்கு வெளியே வந்த குழந்தை, விரல் நுனியில் பிடித்துக் கொண்டு 100 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.

விரைவான நடவடிக்கை:

வழக்கம் போல் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்த ஷோண்டக்பெவ் சபித் வெளியே வந்த போது, குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதை பலர் ஒன்று கூடி பயத்தில் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தார். நிலைமையின் அவசரத்தை புரிந்து கொண்ட சபித், விரைந்து செய்லபட ஆயத்தமானார். விரைந்து சென்ற சபித் குழந்தை தொங்கிக் கொண்டிருந்த மாடியின் கீழ் உள்ள வீட்டிற்குள் நுழைந்து ஜன்னலின் வெளியே வந்தார்.

பின் குழந்தையிடம் பேசிய சபித், திடீரென அதன் காலை பிடித்து இழுத்து குழந்தையை பத்திரமாக பிடித்துக் கொண்டார். பின் லாவகமாக வீட்டினுள் இருந்தவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார். இந்த சம்பவத்தில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு:

இந்த சம்பவத்தை அடுத்து, கஜகஸ்தான் அவசர நிலை அமைச்சகம் அவசர நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய ஷோண்டக்பெவ் சபித்-ஐ நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு பதக்கம் வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

“2019 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தையுடன் யாரும் இல்லை. நல்ல வேளையாக 1985 ஆண்டு பிறந்த நமது சூப்பர் ஹீரோ ஷோண்டர்பெவ் சபித், குழந்தை அந்தரத்தில் அழுத படி தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்ததும், எந்த விதமான தயக்கமும் இன்றி தனது உயிரை பணயம் வைத்து, உடனடியாக அவசர நடவடிக்கை எடுத்து, சில நொடிகளில் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்,” என கஜஸ்தான் அவசர நிலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us