GOAT படத்தில் நடிக்கும் அஜித்…. ஸ்வாரஸ்யமான தகவல் இதோ!

GOAT படத்தில் நடிக்கும் அஜித்…. ஸ்வாரஸ்யமான தகவல் இதோ!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது நடிகர் அஜித் விஜய்யின் கோட் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆம், இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை சமீபத்தில் அசர்பைஜானில் சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படத்தையும் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனை ரீ டுவிட் செய்த GOAT பட நடிகர் வைபவ் சைலன்ட் எமோஜி ஒன்றை பதிவு செய்திருந்ததை பார்த்த நெட்டிசன்கள் பலரும், GOAT படத்தில் அஜித் நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது இணையத்தில் படவைரலாகி வருகிறது.