தன்னுடைய கடைசி படத்தை தானே தயாரிக்கும் விஜய்… “தளபதி 69” மாஸ் அப்டேட்!

தன்னுடைய கடைசி படத்தை தானே தயாரிக்கும் விஜய்… “தளபதி 69” மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “Goat” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. விரைவில் இந்த சூட்டிங் நிறைவு செய்ய உள்ளனர். அதையடுத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளதாக ஏற்கனவே பட குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாளை மறுநாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு Goat படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது தளபதி 69 படத்தின் அறிவிப்பை நாடாளுமன்ற தேர்தலில் அடுத்து அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சில பல பிரச்சனை காரணமாக அந்த நிறுவனம் விலகியதை அடுத்து தற்போது இந்த படத்தை தளபதி விஜய்யே தயாரித்து நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படம் அரசியல் காதொலியை மையப்படுத்தி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.