“டாடா” ஹீரோயினுக்கு கல்யாணம் – களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்!

“டாடா” ஹீரோயினுக்கு கல்யாணம் – களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்!

மலையாள சினிமாவில் இளம் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை அபர்ணா தாஸ் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவர் முதன்முதலில் தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சிறிய நூலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படத்திலேயே யார் இந்த ஹீரோயின்? என கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு அடுத்தபடியாக கவினுக்கு ஜோடியாக இவர் டாடா திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். இந்த படத்தின் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. மிகப்பெரிய அடையாளமும் கிடைத்தது.

அதற்கு அடுத்ததாக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை கமிட்டாகி நடித்து வந்தார் மலையாளத்திலும் பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாள் காதலரான தீபக் பாரம்போல் என்பவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார் நடிகை அபர்ணாதாஸ். இந்நிலையில் தற்போது ஹல்தி பங்க்ஷன் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அபர்ணா தாஸுக்கு திருமணமா? என அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். கல்யாண கலையில் அபர்ணாதாஸின் அழகிய புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.