அஜித் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை – அப்செட்டில் ரசிகர்கள்!

அஜித் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை – அப்செட்டில் ரசிகர்கள்!

கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் பல வருடங்களுக்கு முன் வந்து மாபெரும் வெற்றி அடைத்து வசூலில் வாரி குவித்த திரைப்படங்கள் மீண்டும் வெயிலில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய்யின் கில்லி திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு பல கோடி வசூல் ஈட்டி இருக்கிறது. இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் விஜய் படத்தை தொடர்ந்து அஜித்தின் பிறந்த நாள் ஆன மே 1ம் தேதி அவரின் திரை வாழ்க்கையில் வரலாற்று ஹிட் அடித்த திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தில் ரிலீஸ் செய்யப் போவதாக செய்திகள் வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அஜித்தின் மங்காத்தா திரைப்படம் அந்த நாளில் வெளியாகாது என கூறப்படுகிறது. காரணம் அப்படத்தின் தயாரிப்பாளர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த நேரத்தில் மங்காத்தா திரைப்படம் வெளியிடப்பட முடியாது என தகவல் கசிந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று ஆப்செட் ஆகி விட்டார்கள்.