விஜய் உடன் அதை பண்ண ஆசை… நமீதா பளீச்!

நமீதா

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தவர் நடிகை நமீதா குறிப்பாக இவர் திரைப்படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடித்தும் கவர்ச்சியான பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இடம் பிடித்தார். குறிப்பாக இவரது கவர்ச்சியை காண்பதற்காகவே ரசிகர்கள் ஜொள்ளு பிடித்து அலைந்தார்கள்.

அதனால் இவருக்கு கிடுகிடுவென மார்க்கெட் அதிகரித்து மிக குறுகிய காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். நமிதாவின் கொஞ்சி பேசும் அழகு எல்லோருக்கும் மிகப் பிடித்தது. குறிப்பாக மச்சான் என தமிழ்நாடு ரசிகர்களை அழைத்தது ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் பச்சை குத்தி விட்டது என்றே சொல்லலாம்.

விஜயகாந்த் ,சரத்குமார் ,அஜித்,விஜய் இப்படி பல சூப்பர் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். எது மாதிரியான கவர்ச்சியான ரோல்களாக இருந்தாலும் இயக்குனர்களின் தேவைக்கு விழிப்புணர்வு கேட்பது போல நடந்து கொள்வது இவர்களின் வெற்றிக்கு காரணம். இதனுடைய இவர் அரசியலிலும் களம் இறங்கி இருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறிய நடிகை நமீதா

நடிகர் விஜய் மிக மிக புத்திசாலி. அதேநேரத்தில் அரசியலில் ஒரு புத்திசாலியான எதிரியுடன்மோதுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கும், அவரது கட்சி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நமிதா கூறியுள்ளார். நடிகை நமீதா பாஜகவை சேர்ந்த அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.