பின் கதவை உடைத்து மறைந்து இருந்த ஹபீபர்ரை கைதுசெய்த ஸ்காட்லன் யாட் பொலிசார் !

பின் கதவை உடைத்து மறைந்து இருந்த ஹபீபர்ரை கைதுசெய்த ஸ்காட்லன் யாட் பொலிசார் !

கடந்த ஞாயிறு அன்று, லண்டன் பிராட்பேட் நகரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் வைத்து தனது முன் நாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்தார் ஹபீபர் என்ற 25 வயது இளைஞர். இவரை கடந்த ஞாயிறு தொடக்கம் பொலிசார் தேடிவந்த நிலையில். ஹபீபர் மறைந்து வாழ்ந்து வந்தார். நேற்றைய தினம்(10) அவர் மறைந்து இருக்கும் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுளைந்த ஸ்காட் லன் யாட் பொலிசார், ஹபீபரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

இவர் பங்களாதேஷ் நாட்டவர் என்றும். முதலில் ஐரோப்பிய விசா ஒன்றை எடுத்து. அதன் பின்னர் பிரித்தானிய விசாவை எடுத்து லண்டன் வந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கொலையின் பின்னணியில், இறந்த பெண்ணின் கணவர் இருப்பதாக கூறப்படுகிறது. முன் நாள் காதலன் தற்போதைய கணவர் என்று இந்தக் கொலை பெரும் இடியப்பச் சிக்கலாக மாறியுள்ளது. இன் நாள் கணவர் இந்த முன் நாள் காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளதோடு.

கொலையாளி தப்பிக்கவும் உதவியதாக பொலிசார் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் இன்னும் விசாரணை முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Source : https://www.dailymail.co.uk/news/article-13294983/Man-25-charged-murder-mother-27-stabbed-death-pushed-five-month-old-baby-pram-Bradford.html