ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் இணையும் ”SK23” பட புதிய அப்டேட்!

ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் இணையும் ”SK23” பட புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, சர்க்கார், கத்தி ஆகிய படங்களை இயக்கினார்.

இதையைடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அவர் இயக்கிய தர்பார் படம் கலவையாக விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார்.. இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, எஸ்கே23 படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, மோகன்லால் நடிப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.