கணவருடன் கிளாமர் Pose… அட்டைப்படத்தில் ஜோடியாக விக்கி – நயன்தாரா

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கும் போது நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலித்து வந்துள்ளார்.

ஆனால், முதலில் காதலை சொன்னது என்னவோ நயன்தாரா தானாம். அவரின் கண்ணியமான குணமும் ஒரு இயக்குனராக நல்ல திறமையும் பார்த்து நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து போக அவர் மீது காதலில் விழ ஆரம்பித்துவிட்டாராம்? உடனே விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார் நடிகை நயன்தாரா.

தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் முதல்முறையாக நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் அட்டைப்படம் ஒன்றிற்கு படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் விக்னேஷ் சிவனை மட்டும் எடிட் செய்து நீக்கி விட்டு நயன்தாராவை ஜூம் செய்து ரசித்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

நயன்தாரா