குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை… ஒரே குஷி தான் போல!

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை… ஒரே குஷி தான் போல!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி. சீசன் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாம் சீசன் ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சோவில் நடுவராக செப் தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா ஆரம்பித்து தொகுப்பாளினி பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்பான் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது.

இந்நிலையில் சற்றுமுன் கிடைத்திருக்கும் தகவலின் படி, குக் வித் கோமாளி 5வது சீசனில் புதிய கோமாளியாக சீரியல் நடிகை ஷப்னம் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.