அடடே…! அச்சு அசல் பஹத் பாசில் போன்றே இருக்கும் இந்த நபர் யார்?

அடடே…! அச்சு அசல் பஹத் பாசில் போன்றே இருக்கும் இந்த நபர் யார்?

பிரபல மலையாள நட்சத்திர நடிகர் ஆன பகத் பாஸில் தமிழில் வில்லனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார். பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் தொடர்ந்து வேலைக்காரன் ,சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான நஸ்ரியா நசீமை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஃபஹத் ஃபாசில் போல் இருக்கும் நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஃபஹத் ஃபாசில் போல இருக்கும் இவரின் பெயர் அக்கிபக்கர். கேரளமாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறாராம். இந்த வீடியோ வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.