இவ்வளவும் யாருக்காக எதற்காக ? சூரியா ஜோதிகா ஒன்றாக ஜிம்மில் கடும் பயிற்ச்சி !

இவ்வளவும் யாருக்காக எதற்காக ? சூரியா ஜோதிகா ஒன்றாக ஜிம்மில் கடும் பயிற்ச்சி !

வழமையாக பார்த்தல் தமிழகத்தில் உள்ள ஜிம் நிலையங்களில், வெளிநாட்டு கட்டழகன் பயிற்ச்சி செய்வது போன்ற வீடியோக்கள் தான் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் சமீபகாலமாக ஜோதிகா சூரியா ஜிம்மில் வேர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று, சமூக வலையத்தளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அதில் ஜோதிகா காட்டுத் தனமாக பயிற்ச்சி எடுத்து வருகிறார். ஆக்ரோஷமாக அவர் செய்யும் பயிற்சிகளைப் பார்த்து பலர் அரண்டு போய் உள்ளார்கள்.

இதேவேளை நடிகர் சூரியாவும் சற்றும் சளைக்காமல் வேர்க்கவுட் செய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அட இது எல்லாம் யாருக்காக ? எதற்காக என்ற ஒரு கேள்வி எழுகிறது அல்லவா ? அது என்னவென்றால் , ஜோதிகாவும் சூரியாவும் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளார்களாம். இதனால் தான் ஜோதிகா கடுமையாக பயிற்ச்சி செய்து உடலைக் குறைக்க, சூரியா மேலும் தனது உடலை கட்டழகாக்கிக் கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.