கணவர் மீது இம்புட்டு பாசமா? டாப்ஸியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!

கணவர் மீது இம்புட்டு பாசமா? டாப்ஸியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!

நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 2010ல் வெளிவந்த சிம்மாண்டி நாதம் என்று தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரைத்துறையில் நுழைந்தார்.

தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி அங்கு தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வரத் தொடங்கினார்.

இதனிடையே நடிகை டாப்ஸி பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ எனபவரை கடந்த 10 வருடமாக காதலித்து வந்ததார். அண்மையில் தான் இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் ரகசிய திருமணம் குறித்து கூறியுள்ள டாப்ஸி,

‘ரகசியமாக திருமணம் செய்ய முக்கிய காரணமே என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் மற்றவர்களை involve செய்ய விரும்பவில்லை. ஒரு பிரபலம் திருமணம் செய்தால் எப்படி எல்லாம் பலவிதமாக பேசுவார்கள் என தெரியும். அதற்கு நான் மனதளவில் தயாராகவில்லை.” “நான் ஏற்றுக்கொள்வேன், ஆனால் என்னுடைய கணவர் அதை ஏன் சந்திக்க வேண்டும். அதனால் திருமணத்தை private நிகழ்ச்சியாக நடத்தினோம்” என டாப்ஸி கூறி இருக்கிறார்.