கல்லூரி நண்பர்களுடன் கேப்டன் மிரட்டிவிட்ட ஒரே படம்.. 200 நாட்கள் வரை திரையரங்கை அதகளம் செய்த சம்பவம்

கல்லூரி நண்பர்களுடன் கேப்டன் மிரட்டிவிட்ட ஒரே படம்.. 200 நாட்கள் வரை திரையரங்கை அதகளம் செய்த சம்பவம்

ஹீரோவாக ஒரே ஆண்டில் 18 படங்கள் வெளியாகி சாதனை படைத்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னாளில் புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் எத்தனையோ பேர். அது மட்டுமல்ல 50க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதும் கேப்டன் தான்.

மேலும் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து இவர் நடித்த ஊமை விழிகள் திரைப்படம் சரித்திர சாதனை படைத்தது. யாருமே திரைப்படக் கல்லூரி மாணவர்களை நம்பி படம் எடுக்க முன் வராத நிலையில், அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தவர்.

இவருடைய நம்பிக்கையும் வீண் போகாமல் அந்தப் படமும் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது. கேப்டன் விஜயகாந்த் தீனதயாளன் என்ற கேரக்டரில் காவல்துறை கண்காணிப்பாளராக நடித்த ஊமை விழிகள் படம் முழுக்க, ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார். இதனை அரவிந்த்ராஜ் இயக்கினார்.

நண்பர்களுடன் கேப்டன் முரட்டிவிட்ட ஒரே படம்

ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒருவன், அடுத்தடுத்து அழகான பெண்களை வேட்டையாடும் திரில்லர் திரைக்கதை தான் ஊமை விழிகள். இந்த படம் ரசிகர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் புதுவித அனுபவத்தை தந்தது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆக்சன் கலந்த திரில்லரை முதல் முதலாக தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தது. படத்தில் விஜயகாந்த் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஆன அருண்பாண்டியன், சந்திரசேகர், ராம்கி, ஆபாவாணன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து ஹிட் கொடுத்தனர்.

இந்த படத்தை கேப்டன் தன்னுடைய பிரண்டுகளுடன் ஜாலியாக விரும்பி நடித்தார். இவருடைய மறைவுக்கு பிறகு ‘ஊமை விழிகள் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை மீண்டும் உயிர் பெற்று நடிக்க வைக்க வேண்டும்’ என்றும் ஆபாவாணன் தெரிவித்துள்ளார். இதனால் கேப்டன் ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.