சும்மா ஒரு நாள் கூட வீட்டில உக்கார முடியாது அடுத்து அடுத்து படங்கள் ரஜனியின் கைகளில் குவிகிறது !

சும்மா ஒரு நாள் கூட வீட்டில உக்கார முடியாது அடுத்து அடுத்து படங்கள் ரஜனியின் கைகளில் குவிகிறது !

என்ன தான் லால் சலாம் மண்ணைக் கவ்வினாலும், ரஜனி காட்டில் அடை மழைதான் போல இருக்கே ? சும்மா ஒரு நாள் கூட வீட்டில் இருப்பது இல்லை என்று ரஜனி முடிவெடுத்து விட்டார் போல இருக்கு. தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வரும் ரஜனி, அது முடிந்த கையோடு, லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி சேர்கிறார். இது ரஜனி 171. அதன் பின்னர் தற்போது அவர், தில் ராஜுவுடன் இணைந்து 172 படத்தில் நடிக்க உள்ள நிலையில்.

தற்போது ஐசரி கணேஷ் உடன் கூட்டுச் சேர உள்ளதாக அறிவித்துள்ளார். ஐசரி கணேஷும் ரஜனியும் பழைய நண்பர்கள். ஆனால் இதுவரை அவருக்காக எந்த ஒரு படத்தையும் ரஜனி நடித்துக் கொடுக்கவில்லை. இன் நிலையில் கடந்த புதன் கிழமை அன்று ரஜனிக்கும் ஐசரி கணேஷுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து ரஜனி ஐசரி கணேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

எனவே ஐசரி கணேஷ் படம் ரகனி 173 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஜனி 174வது படம் கூட தயார் என்று கூறுகிறார்கள். அடுக்கடுக்காக பல படங்களை கைகளில் வைத்துள்ளார் ரஜனி என்பது பெரும் ஆச்சரியமான விடையம் தான்.