தமிழ் நாட்டுக்கு வரும் ஜெயலலிதாவின் 28KG தங்கம் 800KG வெள்ளி நகைகள் !

தமிழ் நாட்டுக்கு வரும் ஜெயலலிதாவின் 28KG தங்கம் 800KG வெள்ளி நகைகள் !

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி சிறை சென்று, பின்னர் உடல் நலக் குறைவால் மரணித்த முன் நாள் முதல்வர் ஜெயலலிதாவின் 28KG தங்க நகைகள், மற்றும் 800KG வெள்ளி நகைகள், பெங்களூரில் இருந்து சென்னை வர உள்ளது. கடும் பாதுகாப்போடு இந்த நகைகளை சென்னைக்கு கொண்டு வர உள்ளார்கள். மார்ச் மாதம் 6 மற்றும் 7ம் திகதி அது சென்னை வந்தடைய உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு , 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் அவர் இறந்து விட்டதால், தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் அபராதத்தை கட்டியே ஆகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில். ஏற்கனவே வருமான வரித்துறையினர், செல்வி ஜெயலலிதா வீட்டில் இருந்து எடுத்த 28KG தங்க நகைகள் மற்றும், 800KG வெள்ளி நகைகளை கர்நாடக அரசிடம் ஒப்படைத்து இருந்தார்கள். அதனை சென்னை கொண்டு வந்து, அரச ஏலத்தில் விட்டால் அதனூடாக 40 கோடி வரை கிடைக்கும் என்றும். மீதம் கட்டவேண்டிய 60 கோடிக்கு அவரது அசையா சொத்துக்களை விற்று, அந்த பணத்தை எடுத்து நீதிமன்றத்திற்கு கட்டுவது எனவும் தமிழ் நாடு அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் நகைகள் ஏலத்திற்கு வரும் போது, அதனை சசிகலவே பினாமி ஒருவரை வைத்து வாங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில், தற்போது சசிகலா வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார். அவரை நடிகர் ரஜனிகாந்த் சந்தித்த விடையம், ஹட் நியூசாக பரவி வருகிறது.