கட்டுப்பாட்டை இழந்த கார்… பயங்கர விபத்தில் உயிர் தப்பிய அஜித் – அதிர்ச்சி வீடியோ!

கட்டுப்பாட்டை இழந்த கார்… பயங்கர விபத்தில் உயிர் தப்பிய அஜித் – அதிர்ச்சி வீடியோ!

நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த படம் சில பிரச்சனையால் படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வருகிறது.

பின்னர் மீண்டும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங் அவ்வப்போது தள்ளிக்கொண்டே சென்றது. எனினும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஒட்டி பயங்கர விபத்துக்குள்ளாகி நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அதில் நடிகர் ஆரவ், கைகள் கட்டப்பட்ட நிலையில், காரில் அமர்ந்திருக்க ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அஜித் அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார். வீடியோவின் இறுதியில் கார் நிலைதடுமாறி கவிழ்கிறது. இதை பார்த்து பதரிபோன ஒட்டுமொத்த படக்குழுவும் ஓடிப்போய் அவர்களை காப்பாற்றுகிறார்கள். சார்… Are You Ok? சார்… Are You Ok? என ஒரு குரல் பயத்துடன் கேட்கிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாக அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.