பெரும் தொகை கொடுத்து தந்தியிலிருந்து பிரித்து பாண்டேவை ரஜினியுடன் இணைத்த பா.ஜ.க?!

தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியராக கடமையாற்றிவந்த ரங்கராஜ் பாண்டே திடீரெனெ அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இவர் குறித்த தொலைக்காட்சியில் இருந்து விலகியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அதிர்வுக்கு வந்துள்ளது.

அதாவது பா.ஜ.க-வின் பின்னணியில் இயங்கிவரும் ரஜினி ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறார், இதனால் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, ரஜினியின் புதிய கட்சியின் ஊடக பேச்சாளராக பாண்டேவை நியமிக்கவே அவரை பெரும் விலைகொடுத்து வாங்கியிருக்கின்றது பா.ஜ.க என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் உண்மைத்தன்மையை அறிய சில காலம் பொறுத்திருந்து பார்ப்போம்.