“இந்தியன் 2” படத்தில் நடிக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

“இந்தியன் 2” படத்தில் நடிக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

உலகம் முழுக்க நேற்று இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று வசூலில் அபார சாதனை படைத்திருக்கிறது. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் சேர்ந்து சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்கள் மட்டுமே பெற்று இருந்தது. வசூலிலும் கொஞ்சம் பின் தங்கியே காணப்பட்டதாக செய்திகள் கிடைத்தது. கமலின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் இந்த திரைப்படத்தின் வசூல் கொஞ்சம் மந்தமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவலும் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

இப்படம், இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. தமிழில் ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் 1.1 கோடியும் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதற்காக சித்தார்த்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.