வடநாட்டு நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பெயர் எடுத்தவர் ஜோதிகா .தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்தார் .
சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருடன் நட்பாக பழகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஹிந்தி திரைப்படங்களை கவனத்தில் செலுத்தி வரும் நடிகை ஜோதிகாவின் Instagram பதிவு ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர் நடிகர் அக்ஷய் குமார் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, “வாழ்த்துக்கள் அக்ஷய் குமார். நான் ஒரு ரசிகையாக என் படுக்கை அறையில் உங்களின் போஸ்டரை வைத்திருந்தேன். இன்று உங்களுக்கு ஸ்பெஷலான 150வது படத்தை நான் தயாரித்துள்ளேன். இது மறக்க முடியாத அனுபவம் எனக்கு எனத் தெரிவித்துள்ளார்.