கிண்டலா பண்றீங்க… உடல் எடை குறைத்து பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்!

கிண்டலா பண்றீங்க… உடல் எடை குறைத்து பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்!

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான மஞ்சுமா மோகன் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோயினாக தென்னிந்திய சினிமா படங்களில் நடித்து வந்தார். இதனுடையே தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார்.

தொடர்ச்சியாக தமிழில் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். தமிழில் சிம்புவுடன் சேர்ந்து அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி நல்ல அறிமுகத்தை கொடுத்தார் .

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதை அடுத்து நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மஞ்சிமா மோகன்.அவர் உடல் எடையை குறித்து ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதை எடுத்து தனது உடல் எடையை ஜிம் ஒர்க்கவுட் செய்து குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறி தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதன் மூலம் அவர் கிண்டலுக்கு பதிலடி கொடுத்ததாக நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

https://www.instagram.com/p/C9Wmoh3SuPm/