தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டி லாக்கி விட்டார்கள்.
இவர்களுக்கு தேவ் தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள் .சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும், நடிகர் சூரிய பாலிவுட் நட்சத்திரங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா – ஜோதிகா அம்பானி வீட்டு திருமணத்தில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா” என கேப்ஷன் கொடுத்து காதலில் உருகியுள்ளார்.