விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் டிடி. இவர் பிரபல நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலங்களின் நெருக்கமான தோழியானார்.
இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தி இருந்தார்கள். நடிகர்களுடன் நெருக்கமாக பழகியதாக டிடியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் படு பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தொகுப்பாளர் ரமேஷ் நல்லாயன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் டிடியை ஒருதலையாக காதலித்தேன். டிடிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர் இன்ஸ்ப்ரேஷனாக இருந்து பின் கிரஷ்-ஆக மாறினார். என் காதலை வருடம் சொல்ல சென்ற நேரத்தில் தான் டிடி-யின் நிச்சயதார்த்தம் பற்றி கூறுகிறார்கள். அப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, வேண்டாம் என்று நினைத்து கடைசி வரை சொல்லவில்லை, நல்ல பெண்ணை மிஸ் செய்கிறோமோ என்ற கஷ்டம் இருந்தது என ரமேஷ் நல்லாயன் ஓப்பனாக கூறியுள்ளார்.