பிரபல நட்சத்திர நடிகை டாப்ஸி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.குறிப்பாக இவர் ஹிந்தியில் அதிகம் திரைப்படங்களில் நடித்த அங்கு பாலிவுட்ல நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில் தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து வந்தான் வென்றான், முனி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இதனிடையே அவர் அண்மையில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகை டாப்ஸி முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தும் டாப்ஸி போக மறுத்திருக்கிறார் அதற்கான காரணத்தை கூறி இருக்கும் அவர்,” எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம். எனக்கும் என் குடும்பத்துக்கும் பழக்கமானவர்களின் திருமணத்திற்கு மட்டும் தான் நான் செல்வேன்.
எனவே அம்பானி குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இல்ல. இதனால் தான் அம்பானி திருமணத்திற்கு நான் செல்லவில்லை என டாப்ஸி மிகவும் தைரியமாக தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த போல்டான பதில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.