நல்ல திறமை இருந்தும் தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரம் மிகப்பெரிய அளவில் கிடைக்காமல் தத்தளித்து வருபவர்தான் நடிகர் நகுல். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.
பிரபல நடிகையான தேவயானி தம்பியான இவர் தற்போது வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் மணிகண்டன்,
” பாய்ஸ் படத்தில் எனக்கும் நகுலுக்கும் எடுத்த முதல் காட்சியே முத்த காட்சிதான். அதுவும் சாதாரண முத்தம் கிடையாது உதட்டோடு உதட்டில் கொடுக்கும் முத்தம். அந்த காட்சி எடுக்கும் போது, 15 டேக்கு மேல் போனது. அந்த ஷாட் நன்றாக வரவேண்டும் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டார். அதை எல்லாம் சகித்துக் கொண்டு முகம் சுளிக்காமல் அந்த காட்சியில் நடித்தோம் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.