கணவரை கட்டியணைத்து ரொமான்ஸில் மூழ்கிய வரலக்ஷ்மி – வீடியோ!

கணவரை கட்டியணைத்து ரொமான்ஸில் மூழ்கிய வரலக்ஷ்மி – வீடியோ!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான வரலக்ஷ்மி சரத்குமாரின் மகளாக இருந்தாலும் தனக்கான தனி அடையாளத்தை அவராகவே உருவாக்கிக்கொண்டார். போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து சர்க்கார் மற்றும் தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து தனது வேறொரு ரூபத்தை வெளி காட்டினார்.

வில்லி ரோல்களில் வரலட்சுமி நடிப்பு குறிப்பாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். இதனிடையே மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை 14 வருடங்களாக காதலித்து அண்மையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

இவரது கணவரின் தோற்றத்தை பலர் மோசமாக விமர்சித்தாலும் அதைப் பற்றி எல்லாம் அவர் பெரிதாக கவலைப்படாமல் தனது கணவருடன் ரொமான்டிக் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். ஆம் தற்போது தனது கணவருடன் ரொமான்ஸில் மூழ்கி எடுத்துக் கொண்ட நெருக்கமான வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இதோ அந்த வீடியோ;

https://www.instagram.com/reel/C9pJPFGz8qe/?utm_source=ig_web_copy_link