கமலா ஹரிசுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்துள்ளது- ரம் நிலமை கவலைக்கு இடமாக மாறி வருகிறது

கமலா ஹரிசுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்துள்ளது- ரம் நிலமை கவலைக்கு இடமாக மாறி வருகிறது

கடந்த சனி அன்று, தான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனை அடுத்து தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹரிஷ் , அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் திடீரென அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்திய வம்சாவழி மக்களும், கறுப்பின ஆபிக்கர்கள் மத்தியிலும் அவர் மிகப் பிரபல்யமாக இருக்கிறார்.

இதனால் அவருக்கு திடீரென ஆதரவு அதிகரித்துள்ள விடையம், ரம்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் கமலா ஹரிஷ் சிறந்த ஒரு மேடைப் பேச்சாளர். யாரையும் உடனே எதிர்த்துக் கேள்வி கேட்க்கும் திறமை படைத்தவர். இன்னும் சொல்லப் போனால் புள்ளி விபரங்களோடு சரியான தகவலைக் கொடுத்துப் பேச வல்லவர். அதனால் அவரோடு எவரும் பேசி வெல்ல முடியாது. இன் நிலையில் …

கமலா ஹரிஷ் அவர்கள் ரம்பை தன்னோடு நேரடி விவாதத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்க உள்ளார். இது TVல் லைவாக ஒளிபரப்பு ஆகும். ஆனால் இதற்கு ரம் வருவாரா என்பது பெரும் கேள்விக்குறிதான்.