ரிலீஸ் ஆகி 8 வருஷம் ஆகுது…”கபாலி” படத்தின் மொத வசூல் எவ்வளவு தெரியுமா?

ரிலீஸ் ஆகி 8 வருஷம் ஆகுது…”கபாலி” படத்தின் மொத வசூல் எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கபாலி. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக வசூல் சாதனை படைத்திருந்தது. இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருந்தார்.

இவர்களுடன் ரித்விகா, தினேஷ், கலையரசன், தன்ஷிகா , கிஷோர் குமார் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.165 கோடி செலவில் எடுக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த வசூல் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் 8 yearsof கபாலி எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, இத்திரைப்படம் உலகளவில் ரூ. 313.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.