இந்திய அமைச்சர் தெகிரானில் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகேதான் ஹமால் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்

இந்திய அமைச்சர் தெகிரானில் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகேதான் ஹமால் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்

ஈரான் நாட்டின் புது ஜனாதிபதியாக, மசீஸ் பெஷாஸ்கியான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவே இந்திய மத்திய அமைச்சர், நித்தின் கட்காரி தெகிரான் சென்றிருந்தார். இதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் அதி உச்ச தலைவரான, இஸ்மைலும் கட்டார் நாட்டில் இருந்து சென்றுள்ளார். இஸ்ரேல் மொசாட் உளவுப் படை இவரைத் தான் குறிவைத்துள்ளார்கள். ஈரான் நாட்டுத் தலைநகரான தெகிரானில் இந்த நிகழ்வு முடிந்த பின்னர், இந்திய மத்திய அமைச்சர் தனது ஹோட்டலுக்கு திரும்பி விட்டார்.

இதேவேளை இஸ்மைலும் தனது பாதுகாவலர்களோடு தனது சொந்த வீட்டுக்கு திரும்பியுள்ள நிலையில். திடீரென அவரது வீட்டின் மீது, மிக..  மிகத் துல்லியமாக ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த ஏவுகணை வெடித்ததில், பல பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதோடு, ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மைலும் கொல்லப்பட்டுள்ளார். இந்த ஏவுகணை ஆளில்லா விமானம் மூலம் ஏவப்பட்டதா ? இல்லை அருகில் உள்ள நாட்டில் வைத்து ஏவப்பட்டதா ? என்பது தொடர்பாக இதுவரை ஈரான் எந்த ஒரு அறிவித்தலையும் வெளியிட வில்லை.

இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற சமயம், இந்திய மத்திய அமைச்சர் தங்கி இருக்கும் ஹோட்டலும் சற்று அருகாமையில் இருந்துள்ளது. பெரும் வெடிப்புச் சத்தம் அங்கேயும் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய மத்திய அமைச்சரை பாதுகாப்பாக இந்தியா கொண்டு செல்ல இந்திய ராணுவம் விமானம் தெகிரான் நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் படுகொலை தொடர்பாக இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹமாஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று அதன் அரசியல் பிரிவு. மற்றையது ராணுவப் பிரிவு. ராணுவப் பிரிவின் தலைவராக Yahya Sinwar உள்ளார்.  அரசியல் தலைவராக இஸ்மைல் உள்ளார். அரசியல் தலைவரை இஸ்ரேல் போட்டுத் தள்ள காரணம் என்ன ?  

இஸ்மைல் அவர்கள் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர். அவர் பல உலகத் தலைவர்களோடு தொடர்பில் உள்ளவர். அவரை கொலை செய்தால் ஹமாசுக்கு பெரும் அழிவு ஏற்படும் என்பது ஒரு பக்கம் இருக்க. இஸ்ரேல் நாட்டின் அதிபர் மீது மக்கள் கடும் அதிருப்த்தியில் உள்ளார்கள். அவர் பதவி விலகவேண்டிய சூழ் நிலையில் உள்ளார். ஆனால் இன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நித்தின்யாஹூ வின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. தற்போது இஸ்ரேல் மக்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.  அதிர்வு இணைய வாசகர்களுக்காக பிரத்தியேக புகைப்படங்கள்(Special Fotos). நேரடியாகப் பெறப்பட்டவை.