திருமண நாளில் மனைவிக்கு கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ

திருமண நாளில் மனைவிக்கு கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் பிரபல பாடல் ஆசிரியரான சினேகன். பல்வேறு திரைப்படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக தான் மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் பிரபலமானார்.

கவிஞர் வைரமுத்துவிடும் உதவியாளராக பணியாற்றி கதை எழுதும் நேக்குகளை கற்றுத் தெரிந்து கொண்ட சினேகன் அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கும் இவர் பல்வேறு படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.

இவர் கன்னிகா என்ற பெண்ணை காதலித்து பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொண்டார். கன்னிகா மற்றும் சினேகன் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சினேகன் மனைவி கன்னிகாவுக்கு திருமண நாளில் செம சர்ப்ரைஸ் கொடுத்து அவரை இன்ப மகிழ்ச்சியில் அழைத்து இருக்கிறார்கள். அந்த வீடியோ இணையத்தில் வெளியாக கன்னிகா சினேகன் ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சினேகன் , கன்னிகா , Snehan , Kannika , cinema news ,