கேரள மாநிலம் வயநாட்டில் முண்டக்கை சூரல்மலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான மக்கள் சிக்கி உள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், நடிகர் விக்ரம், கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விக்ரம், வயநாடு நிலச்சரிவு , vikram , wayanad