சில தினங்களுக்கு முன்னர் தான், ஈரான் நாட்டில் தலைநகரில் வைத்து, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவரை இஸ்ரேல் உளவுப் படை கொலைசெய்தது. இஸ்மைல் ஹயானி தங்கியிருந்த வீடு தரைமட்டம் ஆனது. இது எப்படி நடந்தது என்று இது நாள் வரை பெரும் குழப்பமாகவே இருந்தது. குறித்த ஏவுகணை எங்கே இருந்து வந்து இஸ்மைல் ஹயானி வீட்டை தாக்கியது என்பது பெரும் கேள்விக் குறியாக இருந்தது. ஆனால் அவரது வீட்டுக்கு அருகாமையில் வைத்து, யாரோ அதி நவீன மற்றும் வெறும் 7 கிலோ எடையுள்ள ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளார்கள் என்பது இன்று(04) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதி நவீன ஏவுகணை இது. லேசர் கதிரியக்கத்தை அல்லது கிடைக்கும் சமிஞ்சை ஒன்றை வைத்து இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கவல்லது. எந்த இடத்தை தாக்க வேண்டுமோ அந்த இடம் நோக்கி, மிகவும் பலமான ஒரு லேசர் கதிரை காட்டினால் போதும். அந்த லேசர் கதிர் அந்தப் பொருள் மீது பட்டு சில நிமிடங்கள் ஒரு வகையான கதிரியக்கத்தை ஏற்படுத்தும். இதேவேளை குறித்த ஏவுகணையை வான் நோக்கி ஏவினால் போதும். அது உடனே தனது இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும். இது போக..
டிரான்ஸ் மீட்டர் சமிஞ்சையை தேடி, அது வரும் இடத்தையும் இது தாக்க வல்லது. எனவே இஸ்மைல் ஹயாணி தங்கி இருந்த வீட்டில் யாரோ ஒருவர் ஒரு டிரான்ஸ் மீட்டரை வைத்துள்ளார். அல்லது லேசர் கதிர் இயக்கத்தை செலுத்தி இருக்க வேண்டும், என்று ஈரான் நாட்டு உளவுப்படை சற்று முன்னர் அறிவித்துள்ளது.