கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால், மேப்பாடி, சூரல்மலை, அட்டமலை, நிலம்பூர் எனப் பல்வேறு இடங்களில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் வீடுகள் உறவினர்களை இழந்து அனாதையாகிவிட்டனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
கேரளாவை சேர்ந்த ரியான் என்ற மூன்றாம் வகுப்பு மாணவன் எழுதியுள்ள கடிதத்தில் நிலச்சரவில் சிக்கியவர்களை ராணுவம் காப்பாற்றுவதை பார்க்கும் போது பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்திருப்பதாக கூறியுள்ளார் . ராணுவ வீரர்கள் பாலம் கட்டியதையும் பசியில் பிஸ்கட் சாப்பிடுவதையும் பார்த்து நான் வியந்து விட்டேன்.
நிச்சயம் ஒரு நாள் ராணுவத்தில் நானும் சேர்ந்து தேசத்தை காப்பாற்ற விரும்புவதாக அந்த 3ம் வகுப்பு சிறுவன் அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அந்த சிறுவனுக்கு பதில் அளித்து இருக்கும் இந்திய ராணுவம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதில் சிறுவனின் கடிதம் தங்களை ஊக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், ராணுவ சீருடை அணிந்து நீ வரும் நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒன்றுபட்டு இந்த தேசத்தை பெருமைப்படுத்துவோம் என்று பதில் கூறியுள்ளனர். இந்திய ராணுவத்தின் இந்த பதில் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கேரள ராணுவம், வயநாடு நிலச்சரிவு, wayanad ,