வேறு பாடலின் இசையை பிரதி எடுத்து உருவாக்கப்பட்ட சுழிபோட்டு செயல் தொடங்க வைத்தவா என்ற பாடல், ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற பாடலாக மாறியிருந்தது. இந்த பாடலை கீர்த்தி என்ற பெண் பாடியிருந்தார், இது அனைவரும் அறிந்ததே, தற்போது விடயம் என்னவென்றால் கீர்த்தி என்ற பெண்ணுக்கு வேறு பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்புகள் வருகின்றது.
தென்னிந்திய இசை நிறுவனங்களும் கீர்த்தியை அணுக முயற்சிக்கின்றனர், ஆனால் யாராலும் கீர்த்தியை தொடர்புகொள்ள முடியவில்லை, இதற்கு எல்லாம் காரணம் யார் என்றால் SN மியூசிக் இசை குழுவை சேர்ந்தவர்கள்தான், அதில் முக்கியமாக ஸ்ரீ நிர்மலன் என்ற ஒருவர்தான். இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்து பார்ப்போம்.
பின்தங்கிய, மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட, பொறுப்பில்லாத தந்தையை கொண்ட குடும்பத்தில் பிறந்த பிள்ளைதான் கீர்த்தி, தனது கல்வி நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாமல் இருந்த கீர்த்தியிடம் பாடும் திறமை இருந்தது அதை வைத்து SN மியூசிக் இசை குழுவிற்குள் நுழைந்தார், அதில் பாடி வரும் வருமானத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் பார்த்தார் கீர்த்தி. ஆனால் ஸ்ரீ நிர்மலன் சொல்வது நான்தான் அந்த பிள்ளையையும், கீர்த்தியின் குடும்பத்தையும் பார்ப்பது என்று,
இப்படியான நிலையில்தான் ஆரம்பம் முதலே தனது வறுமை காரணமாக ஸ்ரீ நிர்மலன் சொல்வதை கேட்டு இசை துறையில் பணியாற்றி வந்தார் கீர்த்தி, அவர் சொல்வதே மந்திரம் என வேறு வழியில்லாமல் கேட்டு வந்தார். இப்படியான நிலையில்தான் கீர்த்தி பாடிய சுழிபோட்டு செயல் தொடங்க வைத்தவா பாடல் பிரபலமானதும் அனைவரும் கீர்த்தியை தேட ஆரம்பித்தனர், கீர்த்திக்கு பல வாய்ப்புக்கள் குவிகின்றது ஆனால் யாராலும் கீர்த்தியை நெருங்க முடியவில்லை, கீர்த்தியின் சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தையும் ஸ்ரீ நிர்மலன் கைப்பற்றி வைத்திருக்கின்றார், அதில் அவரது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து வைத்துள்ளார்.
எந்த பக்கத்தால் போனாலும் கீர்த்தியை நெருங்க முடியாது, இவ்வாறான சூழ்நிலையில்தான் யாழில் இயங்கும் தனியார் ஊடகம் இந்த விடயத்தை செய்தியாக கொண்டு வந்தனர் அப்போது தனது முகநூலில் புரட்சியாளர் போல் நான் அந்த அலுவலகத்துக்கு போறேன் என காட்டிவிட்டு உள்ளே சென்று கெஞ்சி உள்ளார் இதை எப்படியாவது சமாளித்து விடுங்கள் எங்கள் எதிர்காலம் இதில் இருக்கிறது என்று.
இப்படி போகிறது இந்த விடயங்கள், தற்போது கேள்வி என்னெவென்றால், எதற்காக ஸ்ரீ நிர்மலன் கீர்த்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் வேறொரு ஆண் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விடயங்களுக்குள் தலையிடலாமா?
அதை ஒழுக்கமான ஒரு பெண் அனுமதிக்கலாமா?
இதை கீர்த்தியின் குடும்பம் உறவினர்கள் வேடிக்கை பார்க்கலாமா?
வேளை செய்கிற ஒரு இடத்தில் பணியாற்றுகின்ற ஆணிடம் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விடயங்களை கையாள விட்டால் அந்த பெண்ணுக்கு இந்த சமூகத்தில் என்ன பெயர் என்று கீர்த்திக்கு தெரியுமா? இவை அனைத்தும் கீர்த்தியை மீறி நடக்கின்றது என்றால் தற்போது SN மியூசிக் என்ற மாஃபியாவிற்குள் கீர்த்தியை மிரட்டி வைத்திருக்கிறார்களா?
கீர்த்தியை ஸ்ரீ நிர்மலன் காதலிக்கிறார் என்று சொல்லுகிறார்களே அது உண்மையா? (கீத்திக்கு அப்படியொரு எண்ணம் இருக்கா? ) அல்லது இந்த விடயமாவது கீர்த்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு தெரியுமா? அதனால்தான் கீர்த்தியின் தனிப்பட்ட விடயங்களை ஸ்ரீ நிர்மலன் கையாள அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றதா?
நாங்கள் திறமையை வெளியே கொண்டுவந்தோம் என்பதற்காக பெரும் வாய்ப்புகள் வரும் போது கீர்த்தியை வெளியில் விடமால் அவர்களின் சுய நலத்திற்காக வைத்திருப்பது சரியா? இவ்வாறு பல கேள்விகள் இருக்கின்றன, புலம்பெயர் மற்றும் இலங்கை தமிழர்களே ஏதோ ஒரு வகையில் கீர்த்தியை நேரடியாக தனிப்பட்ட ரீதியில் சந்தித்தால் இது தொடர்பில் பேசுங்கள், அந்த பெண்ணை காப்பாற்றுங்கள்.
அது வரையில் SN மியூசிக் இசைக்குழுவையோ, கீர்த்தியையோ எந்த நிகழ்விற்கும் அழைக்காதீர்கள், இந்த பிரச்சினைக்கு முடிவு எடுங்கள். அது தவிர பாலியல் தொல்லை காரணமாக SN மியூசிக் குழுவில் இருந்த ஒரு பாடகி வெளியில் ஓடியது பலருக்கு தெரிந்த தகவல் என்பதையும் இங்கு சுட்டிகாட்ட வேண்டும்.