Source: New munition for RAK mortars used by Ukraine
உக்ரைன் தயாரித்து வரும் APR-120 என்ற எறிகனை தற்போது சர்வதேச அரங்கில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சொல்லப் போனால் போலந்தில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சி ஒன்றில் இந்த எறிகணைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை பல சர்வதேச நாடுகளின் ராணுவத் தளபதிகள் பார்வையிட்டுள்ளார்கள். 1990ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள், யாழ் கோட்டையை சிங்கள ராணுவத்திடம் இருந்து கைப்பற்ற பெரும் முயற்ச்சியில் ஈடுபட்டார்கள். சில பின்னடைவுகள் எற்பட்டது. ஆனால் சற்றும் தளராத புலிகள், பசிலன் 2000 என்ற எறிகணையை, செய்து யாழ் கோட்டை மீது ஏவினார்கள். இந்த எறிகணை வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவது இல்லை.
ஆனால் பெரும் சத்தத்தை உண்டாக்கும். இது உளவியல் ரீதியாக சிங்கள ராணுவத்தை கிலி கொள்ள வைத்தது. காது சவ்வு வெடிக்கும் அளவு இந்த பசிலன் 2000 ஒலியை எழுப்பும். இதனால் 2 வாரங்களில் , சிங்கள ராணுவம் கோட்டை முகாமை விட்டு கடல் மார்கமாக தப்பி ஓடினார்கள். அதுவும் ஆமி கமாண்டர் மனைவியின் சேலையை கயிறாக பாவித்து, 2 ஆப்பிக்கோ மெத்தையை நிலத்தில்போட்டுவிட்டு, சேலையை பிடித்து சறுக்கிச் சென்று , ஆப்பிக்கோ மெத்தை மீது விழுந்து, அங்கிருந்து படகு மூலம் நெடுந்தீவு நோக்கி ஓடினார்கள். இது வரலாறு. (பலர் அறிந்த விடையம்)
தற்போது இதே போன்ற ஒரு உளவியல் யுத்தத்தை தான் உக்ரைன் அதிபர் ஆரம்பித்துள்ளார் என்று சொல்லலாம். காரணம் இந்த APR-120 ,தான். இது வெறும் 800MM நீளம் தான், 17 KG எடை, மேலும் சொல்லப் போனால் , ஏவினால் 8KM தான் செல்லும். ஆனால் கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்று சொல்வார்களே , அதைப் போல, மிக அதிக அளவில் அழிவை ஏற்படுத்துவது மட்டும் அல்லாது, பலத்த ஒலியையும் ஏற்படுத்தி, எதிரிகளை கிடு நடுங்க வைக்கிறது இந்த எறிகணை. ரஷ்ய ராணுவம் மீது இந்த APR-120 ஏவுகணைகளைக் கொண்டு தான் உக்ரைன் ராணுவம் தாக்கி வருகிறது.
உக்ரைன் ராணுவத் தளபாடங்களை தாமே வடிவமைத்து, தயாரிக்க வல்லது. இதனால் தமக்கு ஏற்றால் போல இவர்கள் ஆயுதங்களை தயாரித்து வருவதோடு. ரஷ்ய அதிபர் புட்டினுக்கு ஒரு பாடம் புகட்டியே தீருவோம் என்று திட சங்கல்பம் பூண்டுள்ளார்கள். மேற்கு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து, உக்ரைனுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. ஒட்டு மொத்தத்தில் இஸ்ரேல் போல ஒரு நாட்டை உருவாக்கி வருகிறது என்று தான் கூறவேண்டும்.