5ம் திகதி வெளியான GOAT திரைப்படத்தில், கிளைமேக்ஸ் காட்சியில் திடீரென நடிகர் சிவகார்த்திகேயன் தோன்றினார். அதில் விஜய் தனது துப்பாக்கியைக் கொடுத்து, “இனி துப்பாக்கி உங்களது தான்” என்று கூறிவிட்டுச் செல்வார். நீங்கள் ஏதோ மிக முக்கியமான வேலைக்குச் செல்கிறீர்கள், நீங்கள் அதனைப் பாருங்கள், நான் இதனைப் பார்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூற, விஜய் தம்ஸ் அப் காட்டி விட்டுச் செல்கிறார்.
இதனால் தளபதி விஜய் அவர்கள், இனி தனக்குப் பின்னர் தன் இடத்தில் சிவகார்த்திகேயனே இருப்பார், என்று தனது ரசிகர்களுக்கு வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். இதுவரை இந்திய சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை. மேலும் சொல்லப் போனால், தனது இடத்தை யாராவது பிடித்துவிடுவார்கள் என்றும், தனது பட்டப் பெயரை வேறு யாரும் தட்டிச் செல்ல கூடாது என்று தான் நடிகர்கள் கவனமாக இருப்பார்கள். சிறந்த உதாரணம் ரஜனி, அவர் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை, வைத்து என்ன நாடகம் எல்லாம் ஆடினார் என்பது ஊர் அறிந்த விடையம்.
ஆனால் ஒரு மாபெரும் நடிகர், தனக்குப் பின்னர் இவர் தான், என்று சொல்லியது மட்டும் அல்லாது. தனது ரசிகர்களையும் சிவகார்த்திகேயனுக்கு சப்போட் செய்யச் சொல்லி இருப்பது, மாபெரும் செயலாகப் பார்கப்படுகிறது. இதனால் நடிகர் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அது போக GOAT படத்தில் கடைசிக் கட்டத்தில் தனது மகளிடம் நீங்கள் யாருடைய ரசிகை என்று கேட்க்க அவரும், தல ரசிகை என்று கூறுகிறார். நடிகர் விஜய் தனது நண்பரான தல அஜித்தையும் பாராட்ட தயங்கவில்லை. மேலும்…
GOAT படத்தில் படையப்பா மியூசிக் வருகிறது, அவர் ரஜனிகாந்தையும், கமலஹாசைனியும் கூட கெளவரப்படுத்தியுள்ளார். கடைசிக் கட்டத்தில் ” மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்றும் பேசி நடித்துள்ளார். பொதுவாகச் சொல்லப் போனால், நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தமிழகத்தில் பெரும் மாற்றம் ஒன்றை உருவாக்க உள்ளார் என்று தான் கூறவேண்டும். 2026 நடக்கவுள்ள தேர்தலில், அவர் வெற்றி பெற்றால் முதல் அமைச்சர், வெற்றி கை நழுவினால், எதிர் கட்சித் தலைவராக மாறுவார். எப்படிப் பார்த்தாலும் அவருக்கு வெற்றி என்பது உறுதி தான்.