தளபதி விஜய் அவர்கள் தற்போது தீவிர அரசியலில் இறங்கவுள்ள நிலையில். அவர் நடித்த கோட் திரைப்படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுவருகிறது. 3 நாட்களில் உலகளாவிய ரீதியில் 300 கோடி இதுவரை வசூலாகியுள்ள நிலையில். தமிழகத்தில் திரை அரங்குகள் ஒவ்வொரு நாளும் நிரம்பி வருகிறது. இன் நிலையில் அவரது கடைசிப் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வன் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்க உள்ளதாகவும் அதில் விஜய் அவர்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் விஜய் அவர்கள் தமிழக முதல்வராக வலம் வரும் காட்சி தொடக்கம், அவர் எப்படி முதல்வர் ஆகிறார் என்பதனை சித்தரிக்கும் படமாக முதல்வன் 2 அமையும் என்று எதிர்பார்கப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்க முன்னர்..
அவர் கடைசியாக நடிக்கும் படம் இது என்பதனால், அரசியல் படமாக இது இருக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. இது வியஜ் அவர்கள் ஆரம்பித்துள்ள தமிழக முன்னேற்றக் கழகத்திற்கும் பெரும் உந்துதலாக அமையும்.