இந்த மாதம் மட்டும் 1.440 ரஷ்ய ராணுவம் உக்ரைன் மண்ணில் கொல்லப்பட்டுள்ளார்கள் !

இந்த மாதம் மட்டும் 1.440 ரஷ்ய ராணுவம் உக்ரைன் மண்ணில் கொல்லப்பட்டுள்ளார்கள் !

செப்டெம்பர் மாதம் மட்டும், உக்ரைன் மண்ணில் வைத்து 1,440 ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இவர்களது சடலங்களை, உக்ரைன் ராணுவம் முறையாக ரஷ்யாவிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தவிர பல தளபாட சேதங்களும் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் 21 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளது, 58 ஆட்டிலறி ஏவு தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது, மல்டி பரல் ஏவு தளம் 4 அழிக்கப்பட்டுள்ளது, 92 ஆளில்லா சிறிய தாக்குதல் விமானங்கள், பெற்றோலை டாங்கர்கள் 65 என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ரஷ்யா தனது ராணுவ பலத்தில் பாதியை இழந்து நிற்பதாக மேற்கு உலக ஊடகங்கள் கூறிவருகிறது. இருப்பினும் உண்மை நிலை பற்றி சரியாகத் தெரியவில்லை.

ரஷ்யாவிடம் முப்படைகளையும் சேர்த்தால் 15 லட்சம் சிப்பாய்கள் இன்னும் இருக்கிறார்கள். இதில் 8 லட்சம் பேர் ராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ரஷ்யாவின் பல எல்லைகளை பாதுகாத்து வருகிறார்கள். அவர்களை உக்ரைன் போருக்கு, அழைக்க முடியாது. காரணம் ஏனைய பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு விடும். இதனால் குறைந்த அளவு ராணுவத்தை வைத்தே ரஷ்யா, உக்ரைனை தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.